இந்தியில் மெகா ஹிட்டான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்து ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்த படம் ‘ஆர்டிகிள் 15’ . சுமார் 93கோடி ரூபாய் வரை வசூலை பெற்ற இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில் ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ARK என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node