கமலை மிரட்டித்தான் விக்ரம் படத்தை வாங்கினாரா.?! உண்மையை ஒத்துக்கொண்ட உதயநிதி.!
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருந்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலை மிரட்டித்தான் விக்ரம் படத்தை உதயநிதி வாங்கினார் என்ற தகவல் பரவி வந்தது.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நேற்று நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி “கமல் சாரை மிரட்டி இந்த படத்தை வாங்கிவிட்டீர்களா என்று கேட்டார்கள், யார் மிரட்டினாலும் அவர் பயப்படக்கூடியவர் அல்ல, அவரை யாரும் மிரட்ட முடியாது”. என உன்மையை கூறியுள்ளார்.