துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள்.!யார் யார் தெரியுமா.?

It has been reported that Rashmika Mandana and Pooja Hegde will play Dulquer Salmaan in the next film directed by Hanu Raghavapudi.

துல்கர் சல்மான் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ரஷ்மிகா மந்தானா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டு அங்கேயும் ஹிட்டானது.

சமீபத்தில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்க ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.

1964ம் ஆண்டு காலகட்டத்தில் உருவாகும் இந்த படத்தில் ராணுவ வீரராக  துல்கர் சல்மான் நடிக்கிறார் .இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் துல்கருக்கு  ஜோடியாக இரண்டு  ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.