தொழிலதிபர் சோஹைல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
31 வயதாகும் ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodeHansika Motwani Wedding [Image Source: Twitter]
இந்த நிலையில், முதன் முதலாக தனது வருங்கால கணவர் சோஹைலுடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோஹைல் வேறு யாரும் இல்லை, ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பர் தான்.
unknown nodeHansika Motwani And Sohael Khaturiya [Image Source: Twitter]
இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவரையும் ஒருவருக்கொருவரை பிடித்துப்போக திருமணம் செய்துகொள்ள முடியுது செய்துவிட்டார்களாம். எனவே இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதால் ஜெய்பூர் அரண்மனையில் அறைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறதாம். எனவே இதனால், பழங்காலத் தோற்றத்துடன், அரச முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeHansika Motwani And Sohael Khaturiya [Image Source: Twitter]
மேலும், திருமணத்திற்கான சரியான தேதி இன்னும் வெளியாகவில்லை, டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் என சொல்கிறார்கள். எனவே உண்மையான திருமண தேதி என்பதையும், ஹன்சிகாவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node