திடீரென சோஷியல் மீடியாக்களிலிருந்து விலகிய திரிஷா.!

டிஜிட்டல் தளம் போதை பொருள் போன்றதால், சிறிது நாட்களுக்கு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக திரிஷா கூறியுள்ளார்.

டிஜிட்டல் தளம் போதை பொருள் போன்றதால், சிறிது நாட்களுக்கு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக திரிஷா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மேலும் இவர் பல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார். தற்போது இவர் பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், ராம் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.மேலும் இவர் பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக உள்ள இவர் திடீரென இதிலிருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக டிக்டாக் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் திரிஷா, தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ இந்த நேரத்தில் தனது மனதுக்கு கொஞ்சம் மறதி தேவை. டிஜிட்டல் தளம் ஒரு போதை பொருள் போன்றது, வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களிலிருந்து திடீரென திரிஷா விலகியது ரசிகர்களிடையில் வருத்தத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் பலர் ஏன் என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

unknown node