விஜய் குறித்து பேசிய சிறுத்தை சிவா! சூர்யா கொடுத்த ரியாக்சன்!

கங்குவா ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க கலந்துகொண்டபோது விஜய் குறித்த கேள்விக்கு சூர்யா எதார்த்தமாக கொடுத்த ரியாக்சன் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

Suriya vijay

சென்னை :இன்றைய காலகட்டத்தில் எதார்த்தமாகப் பிரபலங்கள் செய்யும் விஷயங்கள் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே கூறலாம். அப்படி தான், தற்போது சூர்யா எதார்த்தமாகக் கொடுத்த ரியாக்சன் ஒரு பக்கம் மீம்ஸ்களாக மாறி வைரலாகி கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்களைக் கோபமடையவும் செய்துள்ளது.

சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த ஒரு பகுதியாகச் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிப்பதற்காகச் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா இருவரும் கலந்துகொண்டார்கள்.

அப்போது, சிறுத்தை சிவா விஜய் படம் குறித்தும் அவரை சந்தித்தது பற்றியும் பேசினார். அப்போது சூர்யா சாதாரணமாகத் தனது வாயை அசைத்துக்கொண்டு சிறுத்தை சிவாவைப் பார்த்தார். ஆனால், இதனை மீம்ஸ் கிரியேர்ட்டர்கள் சுமமாக விடுவார்களா? உடனடியாக அவருடைய ரியாக்சன் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து விஜய் பற்றிப் பேசியதால் தான் சூர்யா இப்படி ரியாக்சன் கொடுக்கிறார் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

unknown node

surya reaction File Image]

அவர் இப்படியான ரியாக்சன் கொடுத்தது கண்டிப்பாக விஜய் பற்றிப் பேசியதற்கு இல்லை என்பதை வீடியோவை பார்த்தால் கண்டிப்பாகப் புரியும். வீடியோவில் சிறுத்தை சிவா விஜய்யைப் பற்றிப் பேசுவதற்கு முன்பே சூர்யா தனது ரியாக்சனை அப்படி தான் வைத்து இருந்தார். ஆனால், இது புரியாமல் பலரும் சூர்யா விஜய் பற்றிப் பேசியது பிடிக்காமல் இப்படி ரியாக்சன் கொடுத்துள்ளார் என விமர்சித்து வருகிறார்கள்.

unknown node

ஒரு பக்கம் இப்படி விமர்சனங்கள் வந்தாலும் மற்றொரு பக்கம் சூர்யா ரியாக்சன் மீம்ஸ்கள் மூலம் வைரலாகி கொண்டு இருக்கிறது…

unknown node
விஜய் குறித்து பேசிய சிறுத்தை சிவா! சூர்யா கொடுத்த ரியாக்சன்!