இது உதிரி அல்ல...! பல பேரின் உதிரம்...! பிரபல இயக்குனரின் உருக்கமான பதிவு!

We will not look at anything else. Be sure to only watch in theaters. It's not spare, it's spare for many.

வேறெதிலும் பார்க்க மாட்டோம். திரையரங்கில் மட்டுமே பார்ப்போம் என்பதில் உறுதியாயிருங்கள். இது உதிரி அல்ல, பல பேரின் உதிரம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,  தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும்,  இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.  இன்னும் ஓரிரு நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, இதுகுறித்து இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘வேறெதிலும் பார்க்க மாட்டோம். திரையரங்கில் மட்டுமே பார்ப்போம் என்பதில் உறுதியாயிருங்கள். இது உதிரி அல்ல, பல பேரின் உதிரம்.’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.