இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விஜய் சேதுபதி சில படங்களில் நடித்து வருவதால், அவருக்காக விடுதலை இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக காத்துள்ளனர். இதற்கிடையில், வெற்றிமாறனும் விஜய் சேதுபதி வரும் வரை வாடிவாசல் இசை பணியில் ஈடுபட்டு வருகிறார்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாம். இதில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
unknown nodeபடத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக ஒரு கிராமத்தில் பிரமாண்ட செட் அமைத்து வருகிறார்களாம். விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரையரங்குகளில் வெளியீட படக்குழு தீவீர பணியில் இறங்கியுள்ளனர். இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.