பூஜையுடன் டப்பிங் பணிகளை தொடங்கிய 'வீரமே வாகை சூடும்' படக்குழு.!

விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின.

விஷால் நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.  படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்திற்கான முடிந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node