இறங்கி அடித்த உலகநாயகன்.! தெறிக்கவிட்ட ராக்ஸ்டார்.! அனல் பறக்கும் விக்ரம் முதல் சிங்கிள்..,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

unknown node

இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா வரும் மே 15-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான “பத்தல பத்தல ” என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அதன்படி, தற்போது கமல் எழுதி அவரே பாடிய “பத்தல பத்தல” குத்து பாடல் வெளியாகியுள்ளது. இசையையும் ரசிகர்களுக்கு பிடித்த வாறு இருப்பதால் ரசிகர்கள் பாட்டை கேட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

unknown node

உலக நாயகன் கமல்ஹாசன் கடைசியாக குத்து பாடல்கள் பாடி பல வருடங்கள் ஆகி விட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அவரது குரலில் எப்போது ஒரு குத்து பாடலை கேட்போம் என ஆசையுடன் இருந்த நிலையில், அவர்களது எதிர்பார்ப்பை இந்த பாடல் பூர்த்தி செய்துள்ளது.

unknown node