நாளை மறுநாள் மிரட்ட வரும் "காஞ்சனா-3" படத்தின் டிரைலர்

this news gives information about The trailer of the "Kanjana-3" movie will be intimidated tomorrow-nalai marunal miradavarum

தற்போது “காஞ்சனா 3” படத்தின் ட்ரைலர் மார்ச் 28-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது .மேலும் ஏப்ரல் 19-ம் தேதி படம் திரைக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் தமிழில் சிறந்த இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் ,இயக்கத்திலும் பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.

அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “முனி”. இப்படத்தை தொடர்ந்து முனி படத்தின் இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரில் வெளி வந்தது.

பிறகு “காஞ்சனா-2 “வெளியானது.அனைத்து பாகங்களிலும் நடிகராக லாரன்ஸ்  நடித்து உள்ளார். காஞ்சனா  இரண்டு பாகங்களும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்  காஞ்சனா 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை வேதிகா,ஓவியா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா,  ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது “காஞ்சனா 3” படத்தின் ட்ரைலர் மார்ச் 28-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது .மேலும் ஏப்ரல் 19-ம் தேதி படம் திரைக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.