வருவதும் காதல்... போவதும் காதல்... இயக்குனர் தனுஷின் அடுத்த அழகியல் NEEK.!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த

Hero Image

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50-வது படமா D50 திரைப்படத்தினை  இயக்கி முடித்துவிட்டார்.

அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு மட்டும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அம்மா கொடுத்த அட்வைஸ் கேட்டதால் அனிகாவுக்கு அடித்த ஜாக்பார்ட்!

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக பவிஷ் நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் தலைப்புடன் அறிவிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டர் உடன் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டரில் தனுஷ் குரல் காதல் என்றால் என்ன? என்று கேட்கிறார் பின் வருவது போவது காதலா? வருவதும் காதல் போவதும் காதல் என்று கூறுகிறார் அதனுடன் ஜிவி பிரகாஷ் இசை வருகிறது. அதன்பிறகு படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த விவரங்கள் வருகிறது. இதனை வைத்து பார்க்கையில் படம் காதல் கதையம்சம் கொண்ட படம் என தெரிகிறது.

unknown node