பேட்ட -2 உருவாகுமா..? கார்த்திக் சுப்புராஜ் கூறிய தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் 2ம் பாகம் பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் 2ம் பாகம் பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட, இந்த படத்தில் விஜய்சேதுபதி,சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திகி, மாளவிகா மோகன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந் தார்கள், சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் சிறந்த விமர்சனத்தை பெற்று 250 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது, இதைப் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியது, என்னிடம் பேட்ட படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை இல்லை, ஏதிர்காலத்தில் உருவாகலாம் என்று கூறியுள்ளார், மேலும் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.