மாஸ்டர் படைத்த அடுத்த சாதனை.! 1 கோடி..?

The original background music (Jukebox) of the master film has set a new record.

மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை (Jukebox) புதிய சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல  படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்திலிருந்து ஒரிஜினல் பின்னணி இசை (Jukebox) கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வெளியானது. தற்போது யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்துள்ளது. இதுவரை வந்த எந்த இந்திய சினிமாவில் ஓரிஜினல் பின்னணி இசை (Jukebox)-ம் 1 கோடி பார்வையாளர்களை  கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்திருந்தது.

unknown node