மொத்த ஷூட்டிங்கும் நிறைவு.! பிரமாண்ட RRR-ன் அடுத்த பெரிய அப்டேட் விரைவில்..!

The whole shooting of the hugely emerging RRR film is over

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது, மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

கடந்த 2018 – ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இன்றுதான் முழுவதுமாக முடிந்துள்ளது . படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வரும் நிலையில்,  பிரமாண்ட அப்டேட் விரைவில் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

unknown node
மொத்த ஷூட்டிங்கும் நிறைவு.! பிரமாண்ட RRR-ன் அடுத்த பெரிய அப்டேட் விரைவில்..!