விஜய் ரசிகர்கள் அடுத்தகக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாரிசு”. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.
unknown nodeயோகி பாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், ஜெயசுதா, ஷாம், சம்யுக்தா கார்த்திக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் பிரமாண்டமாக செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇதற்கிடையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சம்யுக்தா கார்த்திக் சமீபத்திய ஒரு பேட்டியில் வாரிசு படத்தையும், விஜய்யும் புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வாரிசு திரைப்படம் படம் பயங்கரமா வந்திருக்கு. விஜய்யோட நடிப்பு வேற லெவலில் இருக்கு.
இதையும் படியுங்களேன்-இனி எங்களுக்கு தளபதியே தேவையில்லை…ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான விஜய்…!
unknown nodeமுதல் முறையா அவர் நடிப்பை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை ஒரு ஆசீர்வாதமாக நினைத்து கொள்கிறேன். விஜய் ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ளாமல் மிகவும் எளிமையாக பழகுவார். சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் குடையை அவரே பிடித்து கொள்வார்” என புகழ்ந்து பேசியுள்ளார் நடிகை சம்யுக்தா.