உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “கலகத்தலைவன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமார்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது தன் மகனின் “கலகத் தலைவன்” படம் பார்த்தீர்களா..? எப்படி இருக்கிறது..? என்று அமைச்சரிடம் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ” முதலமைச்சர் ஸ்டாலின் “கலகத் தலைவன்” படம் பார்த்தீர்களா..? என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்கிறார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நான் முதல் நாளே படம் பார்த்தேன். படம் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தின் பாடல்கள் வரும்போது யாரும் எழுந்துபோகவில்லை. அந்த அளவிற்கு கனகச்சிதமாக இருந்தது. என்று கூறுகிறார்.
unknown node