சென்னை :இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 69” படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த 2 தினங்களாக படக்குழு தளபதி 69-ல் நடிக்கக்கூடிய நடிகர்களின் போஸ்ட்டர்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர்.
தளபதி 69 நடிகர்கள் குழுமம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத மாதிரியும் தெரிகிறது. விஜய் கடைசி படம் என்பதால், லிஸ்ட் ரொம்ப பெரிசாகவே போகிறது. அட ஆமாங்க… ஏற்கெனவே, இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
unknown nodeThalapathy 69 Casting[File Image]இந்நிலையில், இன்றைய தினம் கௌதம் மேனன், நடிகை பிரியாமணி மற்றும் நரேன் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் எடுக்கப்படும் இறுதிப் படத்தைக் குறிக்கிறது.
தொழில்நுட்பக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளனர். இப்படத்தை கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில், வெங்கட் கே நாராயணா தயாரிக்கிறார். மேலும், ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்கே இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
இதில், நடிகை பிரியாமணி விஜய்யுடன் நடிப்பது இதுவே முதல் முறை. இன்னும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அநேகமாக, படம் அடுத்த ஆண்டு (2025) அக்டோபரில் என எதிர்பார்க்கப்படுகிறது.
