தனுஷின் நானே வருவேன் படத்திற்கு கதாநாயகி இவர் தானாம்!

It has been reported that Dhanush Selvaragavan is in talks with popular actress Tamanna to play the heroine in the new film.

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கான டைட்டில் மற்றும் போஸ்டர் பொங்கலையொட்டி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருந்தது.

நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிப்பதற்காக பல்வேறு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இது குறித்து தமன்னாவிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனுசுடன் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களில் நடித்துள்ள தமன்னா தனுஷின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, இதிலும் அவரை கதாநாயகியாக வந்துவிட்டால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.