'சாஹோ’ திரைப்படத்தின் சண்டை காட்சிக்கு ரூ.70 கோடி செலவு செய்த பட குழு !

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக  "சாஹோ" திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகையாக ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக  “சாஹோ” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகையாக ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்குகிறார்.

இப்படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் பாடல்கள் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டன.இப்படத்தில் இடம் பெற்ற “காதல் சைக்கோ ” பாடல் அனிருத் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக ரூ.70 கோடி செலவு செய்ததாக பட குழு அறிவித்து உள்ளது.இப்படத்தின் சண்டை காட்சிகள் அபுதாபியில் படமாக்கப்பட்டது .60 நாள்களாக நடந்த இந்த சண்டை காட்சியைட்ரான்ஸ் பார்மர்ஸ் , டை ஹார்ட்ஆகிய படங்களில் பணியாற்றிய சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்து உள்ளார். மேலும் “சாஹோ” திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.