பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல பாடகர்!

பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சினிமா பின்னணி பாடகர் மனோ.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பலரும் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய்கண்டிகை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சினிமா பின்னணி பாடகர் மனோ கலந்து நிவாரண உதவி வழங்கும் நிகழ்வை துவங்கி வைத்தார்.
அப்பகுதியில், தெலுங்கு பேசுபவர்களும் உள்ளனர் என்பதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பாடகர் மனோ எடுத்து கூறி, சினிமா பாடல்களை பாடி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025