'கோப்பையை வென்றதுக்கு நன்றி ரோஹித்' ! ஹிப்ஹாப் ஆதிக்கு ஆஸ்திரேலியா நபர் கொடுத்த அதிர்ச்சி!

ஹிப் ஹாப் ஆதி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரையும் கிரிக்கெட் பிரபலங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து நாம் பார்த்திருப்போம். குறிப்பாக கே.எல்.ராகுலை

rohit sharma

ஹிப் ஹாப் ஆதி :சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரையும் கிரிக்கெட் பிரபலங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து நாம் பார்த்திருப்போம். குறிப்பாக கே.எல்.ராகுலை நடிகர் விக்ராந்துடனும், ரோஹித் சர்மாவை மிர்ச்சி சிவாவுடனும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து பார்த்திருப்போம். ஆனால், இப்போது அதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

அது என்னவென்றால், நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். அப்போது ஆஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவர் வேகமாக வந்து ஹிப் ஹாப் ஆதியை கட்டியணைத்து கொண்டு கைகுலுக்கி புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார்.

பிறகு உலகக்கோப்பையை வென்று இருக்கிறீர்கள் உங்களுக்குஎன்னுடைய வாழ்த்துக்கள் என்று ஆதியை பார்த்து அந்த நபர் கூற ஆதி அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த நபரிடம் எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று ஆதி கேட்கிறார். அதற்கு அந்த நபர் நீங்கள் ரோஹித் சர்மா தானே? என்று கேட்கிறார்.

உடனே சிரித்த ஆதி நான் ரோஹித் சர்மா இல்லை நான் இந்தியாவை சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் என்று கூறி விளக்கம் கொடுத்தார். உடனே இதனை கேட்ட அந்த நபர் சிரித்துக்கொண்டே சென்றார். இந்த வீடியோவை ஹிப் ஹாப் ஆதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரோஹித் சர்மாவையும் டேக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node