தளபதி 63! லேட்டஸ்ட் தகவல்களை பகிர்ந்து கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!!!

Default Image

தளபதி விஜய், சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் என்டெர்டெயின்ட்மென்ட் தயாரித்து வருகிறது. நயன்தாரா, ‘பரியேறும் பெருமாள்’ கதிர் , விவேக் என பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்..

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்து அண்மையில் ஓர் பேட்டி ஒன்றில் கூறிய ரகுமான், ‘இப்படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம். இப்படம் தான் இசையமைத்த  பீலே (ஆங்கிலம்), லகான் (அமீர்கான் நடித்த ஹிந்தி மொழி படம்) ஆகிய படங்களை போல தளபதி63 படமும் எடுக்கப்பட உள்ளதாம். மேலும், இயக்குனர் அட்லியின் இசை ஆர்வம் மற்றும் அவரது ரசனை ஏ ஆர்.ரகுமானுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்