இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் , பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தவர் தான் விஜய். இவரது தந்தை அந்த காலகட்டத்தில் பிரபலமான இயக்குனர் என்பதால் நான் சிவப்பு மனிதன், வெற்றி, சட்டம் ஒரு விளையாட்டு போன்ற சில திரைப்படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
unknown nodeஅதன்பிறகு, ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் அவரை ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இந்த படம் பெரிதாக வெற்றிபெறாத காரணத்தால், இப்போது உள்ள அளவிற்கு விஜய் வளர்ந்து பெரிய நடிகராக இருப்பார் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
unknown nodeமுதல் படம் தோல்வியடைந்தால் என்ன தன்னுடைய கடின உழைப்பை கைவிடாமல் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான “பூவே உனக்காக” படம் விஜய்யை பெரிய அளவில் நடிகராக தெரியவைத்தது என்றே கூறவேண்டும்.
unknown nodeஇந்த படத்திற்கு பிறகு காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி என அணைத்து படங்களுக்கு விஜய்க்கு வெற்றியை தேடி தந்தது.அதன்பிறகு இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மார்க்கெட்டை உயர்ந்திய படம் என்றால் துப்பாக்கி என்று கூறலாம். துப்பாக்கி படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் வரை எந்த படங்களுக்கு தோல்வியை அடையவில்லை வசூல் ரீதியாக பல சாதனைகளயும் படைத்தது.
unknown nodeஇப்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .
Wishing you a very happy birthday @actorvijay sir ❤️❤️ Best wishes for #Varisu ???????? #HBDThalapathyVijay pic.twitter.com/M31q5hn4PI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 22, 2022
Happy bday @actorvijay na!! Love u!! God bless!! #HBDDearThalapathyVijay pic.twitter.com/ylm6Zt5EKM
— venkat prabhu (@vp_offl) June 21, 2022
Happy birthday dearest Thalapathy @actorvijay sir ❤️
Now ready the firecracker ????
@Nelsondilpkumar @Bjornsurrao https://t.co/2RRb7AplRW— Anirudh Ravichander (@anirudhofficial) June 22, 2022
Advance Birthday wishes Vijay na ????????????#HBDDearThalapathyVijay https://t.co/iK8ailCA0u
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2022