சென்னை :தளபதி விஜய்யின் கடைசிப் படமான தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்ட படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கோட’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக பாக்ஸ் ஆபிஸில் 400 கோடியை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே, விஜய் தனது ‘தளபதி 69’ படம் குறித்த அப்டேட் குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், விஜய் கடந்து வந்த பாதையையும், விஜய் ரசிகர்கள் அவர் சினிமாவை விட்டு செல்லும் கவலையையும் பற்றி விவரிக்கிறது. விஜய் சினிமாவை விட்டு விடை கொடுப்பது போல் அந்த வீடியோ அமைந்துள்ளதால், ரசிகர்கள் கனத்த இதயத்துடன் நாளை இந்த அப்டேட்டை வரவேற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம், முழு நேர அரசியலுக்கு மாறுவதற்கு முன்பு விஜய்யின் இறுதிப் படமாக இது இருக்கும் என்பதால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளன.
unknown nodeஇதற்கிடையில், சிம்ரன் மற்றும் சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளதாகவும், மலையாள நடிகை மமிதா பைஜு விஜய்யின் தங்கையாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
