பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
unknown nodeஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் கிழமை தொடங்கப்படவுள்ளது.
unknown nodeகடந்த சில நாட்களாவே இந்த படத்தில், ஆக்சன் காட்சிகள் இல்லை என்றும் முழுக்க முழுக்க படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
unknown nodeஇந்நிலையில், இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ “தளபதி 66 திரைப்படத்தில் ஆக்சன், ரோமன்ஸ், போன்ற அனைத்தும் உள்ளது. குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளில் உள்ளது. உங்கள் இதயத்திற்கு நெருக்கமான படமாக இந்த படம் அமையும்” என கூறியுள்ளார்.