தளபதி 65 பெரிய லெவல் படம் – யோகி பாபு ஓபன் டாக்..!!

thalapathy 65 is a big level film, said actor Yogi Babu in a recent interview

தளபதி 65 பெரிய லெவல் படம் என்று நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காமெடி நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியது ” தளபதி பெரிய லெவல் படம் ஆகும். படத்துல நாணும் இருக்கேன். பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரம் சொல்லுவாங்க. அது அவங்கலெ அறிக்கை விடுவாங்க” என்று கூறியுள்ளார்.