வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை திரைப்படம்!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இப்படம் கடந்த 8-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ.97.5  கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும், பல இடங்களில் பல கோடிகளை வசூல் செய்து, மொத்தம் ரூ.129 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

unknown node