Untitled

நாடு முழுவதும், அவசர உதவிக்கு, '112' என்ற எண்ணில் அழைக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தை

நாடு முழுவதும், அவசர உதவிக்கு, ‘112’ என்ற எண்ணில் அழைக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தை போலவே தற்போது கேரளாவிலும் இந்த திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை கேரளாவில் விளம்பரம் படுத்தும் வகையில், கேரள போலீசார் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, தெறி ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தை போல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் அவரது திரைப்படங்கள் முதல் நாளில் வசூல் செய்வதை போல, கேரளாவிலும் அதிகமாக வசூல் செய்துவிடும். குறிப்பாக கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் அதிகம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கேரள போலீசார் இந்த வித்தியாச முயற்சியை கையாண்டுள்ளார்கள்.

unknown node