நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை தமிழக போலீசார் துரத்தி பிடித்து, அப்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி உமா கூறுகையில், கேரளா மாநிலம் திருச்சூரில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு இந்த கும்பல் தப்பி வந்துள்ளது என்றும், அவர்களை பிடிக்க முயலும் போது ஒரு கொள்ளையன் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப […]
திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விச ரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் மலையாளஇயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்பட சினிமா கலைஞர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தது. இது தொடர்பாக, பிரபல மலையாள முன்னணி நடிகர்களான சித்திக், ஜெயசூர்யா, நிவின் பாலி, மணியன் பிள்ளை ராஜு, முகேஷ், பாபுராஜ், இயக்குநர் ரஞ்சித் என பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த […]
இடுக்கி : கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019 இல் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அடிமாலியில் உள்ள ரிசார்ட் மற்றும் ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக […]
திருவனந்தபுரம் : சித்திக் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பற்றி எரியும் தீயில் எண்ணெண்யை ஊற்றுவது போல, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். இதனால், மலையாள சினிமாவையே பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் சூழலில், இதன் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று முழுவதுமாக கலைக்கப்பட்டது. […]
திருவனந்தபுரம் : நடிகை ரேவதி அளித்த புகாரில் நடிகர் சித்திக் மீது, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று முழுவதுமாக கலைக்கப்பட்டது. கடந்த வாரம் அங்கு பெண் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியாக ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து தொடர்ந்து […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். […]
முழு அடைப்பின் போது அரங்கேறிய கல்வீச்சு, பேருந்துகள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். மேலும் பொதுச்சொத்துக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை […]
நாடு முழுவதும், அவசர உதவிக்கு, ‘112’ என்ற எண்ணில் அழைக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தை போலவே தற்போது கேரளாவிலும் இந்த திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தை கேரளாவில் விளம்பரம் படுத்தும் வகையில், கேரள போலீசார் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, தெறி ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். தமிழகத்தை போல கேரளாவிலும் நடிகர் […]
சபரிமலையில் பெண் பக்தர்களின் பாதுகாப்புக்காக 500 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆண்கள் அதிக அளவில் வரக்கூடிய சபரிமலையில் பெண் பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த கேரள காவல்துறை உயரதிகாரிகள், பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேர கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]
தற்போது அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்கு ஆதார் கட்டயமாக்கபட்டு வருகிறது. இதனால் அதார் இதுவரை எடுக்காதவர்களும் அதார் எடுக்க முன்வந்து எடுத்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறைகைதிகளுக்கும் அதார் எடுக்க வேண்டும் என கேரளா அரசு சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கேரளா டிஜிபி ஸ்ரீலேகா அளித்த பேட்டியில், ‘அனைத்து தரப்பு மக்களும் ஆதாருடன் இணைக்கபடுகின்றனர். அதுபோல், சிறை கைதிகளையும் அதார் திட்டத்தில் இணைக்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளின் தகவல்கள் மற்றும் அடையாளங்களை பதிவு செய்யும் […]