தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்!

மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் காலமானார். இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகேஷ் பாபுவின் தாயார் காலமானதை தொடர்ந்து திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்!