விரைவில் கெட்டிமேளம்…திருமண தேதியை அறிவிக்க காத்திருக்கும் மில்கி பியூட்டி தமன்னா!

Tamannaah Bhatia Wedding

பாலிவுட்டில் புதிய காதல் ஜோடிகளான தமன்னா – விஜய் வர்மா ஆகியோர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமன்னா தற்போது விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சூசகமாக பதில் கூறிஉள்ளார்.

ஆம், சமீபத்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய தமன்னா, “எனக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே காதல் வந்துவிட்டது” என மனம் திறந்து பேசினார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகினது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, இவர்கள் திருமணம் குறித்த லேட்டஸ்ட் தகவலின்படி, டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நிச்சயதார்த்தம் என்றும், பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

நான் அவரை காதலிக்கிறேன்…குட் நியூஸ் சொன்ன தமன்னா..குவியும் வாழ்த்துக்கள்.!!

இதற்கிடையில், மில்கி பியூட்டி தமன்னாவுக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், விரைவில் தனது திருமணம் குறித்த நாளை தேதியுடன் விரைவில் அறிவிக்க காத்திருக்கிறார் போல் தெரிகிறது.

தமன்னா

நடிகை தமன்னா தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துவருகிறார். தமன்னா டைசியாக ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியாததால் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்