நெருக்கமாக நடிக்க ஆண்கள் தான் சங்கடப்படுகிறார்கள்…அந்த மாதிரி காட்சிகள் குறித்து பேசிய நடிகை தமன்னா.!
நடிகை தமன்னா தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைபடங்களில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய தமன்னா ” திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ஆண்கள் தான் மிகவும் சங்கடப்படுகிறார்கள். நடிகர்களும் சாதாரண மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும், இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம். அந்த மாதிரி காட்சிகளில் நெருங்கி நடித்தால் நடிகைகள் ஏதேனும் நினைத்து விடுவார்களோ என்று பெண்களை விட ஆண்கள் தான் சங்கடப்படுகிறார்கள். மேலும் சிலர் இது போல காட்சிகளில் நடிக்க ரொம்பவே வெட்கப்படுகிறார்கள் ” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை தமன்னா, போலா சங்கர் எனும் தெலுங்கு திரைப்படத்திலும், பாந்த்ரா எனும் மலையாள படத்திலும், போலே சூடியன் எனும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.