அடுத்த வருஷம் "தளபதி 65" பற்றி தான் பேசுவீங்க...கே ஜி எஃப் ஸ்டண்ட் மாஸ்டர்..!

Stunt Master Anbariv has said that next year you will forget the KGF stunt scenes and the commander will only talk about 65 fight scenes.

ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் அடுத்த வருடம் நீங்கள் கேஜிஎஃப் ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள் என்றும் தளபதி 65 சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.

அதற்கு பிறகு இந்த தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே, ரஷ்மிகா மந்தனா, நடிப்பதாகவும் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் மற்றும் ராமசந்திர ராஜூ, நவாசுதீன் சித்திகி, நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றவுள்ள அன்பறிவ் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் போது தளபதி 65 படத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு அடுத்த வருடம் நீங்கள் கேஜிஎஃப் ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள் என்றும் தளபதி 65 சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

unknown node