ஆஸ்கர் விருது பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் சூர்யாவின் சூரரை போற்று.!

It has been announced that Surya's film 'Soorarai Pottru' has been nominated for an Oscar.

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் தொடர்ந்து நீடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார் .மேலும் ஊர்வசி , கருணாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் .ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.சூர்யாவின் சிறப்பான நடிப்பு உட்பட அனைத்தும் பாராட்டப்பட்டதுடன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அது மட்டுமின்றி சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியான படங்களில் அதிகமானோர் பார்த்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது . சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கர் போட்டிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள 93-வது ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்காக தகுதியான 366 படங்களில் ஒரே தமிழ்படம் சூரரை போற்று . சிறந்த படம் ,சிறந்த நடிகர்,சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இதற்கான வாக்கு பதிவு மார்ச் 5-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. மார்ச் 15-ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சூரரை போற்று படக்குழுவினருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown node