தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சூர்யா.! காளையுடன் வைரலாகும் வீடியோ..

Default Image

இன்று சித்திரை மாதம் முதல் நாள் (14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது  வாழ்த்துக்களை வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒரு காளை மாடுடன் வந்து “அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் “என கூறுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கதில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்