இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள்.
unknown nodeஅலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
unknown nodeபடம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் படத்தை பார்த்த பிரபலங்களும் தங்களத்தி கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில் தற்போது பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கக்கத்தில் ” ஆர்ஆர்ஆர் படம் மிகவும் அருமையாக உள்ளது..ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு எடுத்துள்ளீர்கள்…நீங்கள் ஒரு அற்புதம் ராஜமௌலி சார். நமது இந்தியத் திரைப்படத் தரத்தை மேலும் உயரத்திற்கு உயர்த்துவோம்” என பதிவிட்டுள்ளார்.
unknown node