பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ் தாத்தா!

It has been reported that Suresh's grandfather will return to the Bigg Boss house. already 3rd entry azeem come in this week.

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் தாத்தா வரவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே பீஸ் சீசன் 3 தான் மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்புடனும் நடைபெற்ற சீசன் என்று கூறலாம். ஆனால் அதிலும் வனிதா வெளியேறியபோது சற்று சுவாரஸ்யம் குறைந்ததால் மீண்டும் சில டாஸ்குகள் மூலமாக அவர் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதுபோல தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுரேஷ் அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். ஆனால் அவர் சென்றதற்குப் பிறகு சற்று சுவாரசியம் குறைந்தது போல ரசிகர்களுக்கு தோன்றுவது போல பிக்பாஸுக்கும் தோன்றுகிறது போல, எனவே தற்போது மீண்டும் சுரேஷ் தாத்தா அவர்கள் பிக் பாஸ் வீட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வாரத்தில் ஏற்கனவே மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக பகல் நிலவு அஷீம் வரவுள்ள நிலையில் சுரேஷ் தாத்தா அவர்களும் என்ட்ரி கொடுக்க உள்ளதால் இரண்டு என்ட்ரி இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்திருந்து பார்க்கலாம். ஏனென்றால் வெளியில் இத்தனை நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்லும் சுரேஷ் தாத்தா ஒன்றும் தெரியாமல் விளையாடியபோது அனைவருக்கும் கண்கட்டி வித்தை காட்டியவர். வெளியில் சென்று அனைத்தையும் அறிந்து கொண்டு வந்து எப்படி விளையாடுகிறார் என்று பார்க்கலாம்.