என் சகோதரனுக்கு ஆதரவு தாருங்கள்... இணையத்தில் கெஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்.!

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஜிபி முத்து, அசல் கோளாறு, ராம்

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஜிபி முத்து, அசல் கோளாறு, ராம் ராமசாமி, அசீம், ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், அமுதவாணன், தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

unknown node

இதில் மணிகண்டன் வேறுயாரும் இல்லை தற்போது கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரன் தான். மேலும, மணி கண்டன் மிகப் பிரபலமான டான்ஸர் ஆவார். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுகிறார். இவர் இவர் சில படங்கள், சீரியல்களிலும்நடித்து இருக்கிறார்.

இதையும் படியுங்களேன்-உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இத்தனை கோடி வசூலா..? வெளியான சூப்பர் தகவல்.!

unknown node

இந்த நிலையில் தனது சகோதரர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு அனைவரும் ஆதரவு தரும்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . இது குறித்து அவர் கூறியிருப்பதாவது. ” நான் என்னுடைய அண்ணன் மணிகண்டனை புஜ்ஜி என்றுதான் அழைப்பேன்.

unknown node

என்னுடைய அண்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி அதே சமயம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். என் தந்தையின் மறுஉருவம் அவன்,  கண்டிப்பாக சில நாட்கள் அவரை இழக்க நேரிடும் ஆனால் நான் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தயவு செய்து என் சகோதரனுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

unknown node
என் சகோதரனுக்கு ஆதரவு தாருங்கள்... இணையத்தில் கெஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்.!