மம்முட்டியின் அடுத்த படத்தில் குத்தாட்டம் போட உள்ள சன்னிலியோன்!!
மலையாளத்தில் மெகா ஸ்டாராக உள்ள மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘தங்க மீன்கள்’ ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்..
இந்த படத்திற்கு மதுரராஜா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வைஷாக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU