கிராமத்து சப்ஜெக்ட்டில் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அருண்விஜய்.! இயக்குநர் யார் தெரியுமா.?

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக ஹரி இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக ஹரி இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் தற்போது இவர் பிரபல முன்னணி இயக்குநருடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கும் முன்னணி இயக்குனரான ஹரி இயக்கும் கிராமத்து சப்ஜெக்ட் ஒன்றில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரி அவர்கள் சூர்யாவின் அருவா படத்திற்கு முன்பு அருண்விஜய்யை வைத்து படத்தை எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.