அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. – எஸ்.பி.பி மகன் சரண் மகிழ்ச்சி.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், இருந்தும் இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
unknown nodeஇந்நிலையில், எஸ்.பிபி மகன் சரண் சிகிச்சையில் உள்ள தன் தந்தையை கண்டு பேசியதாக அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அறையில் இசை ஒலிபரப்பப்பட்டது. அதனை அவர் ரசித்தார். மேலும் தனது தாய் குறித்தும் சைகையில் விசாரித்தார்.’ என கூறியுள்ளார்.
unknown node