நிஜ ஹீரோக்களிடம் கையொப்பம் வாங்கி நெகிழ வைத்த சூரி.!

மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் போன்ற நிஜ ஹீரோக்களிடம் கையெழுத்து வாங்கி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.

மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் போன்ற நிஜ ஹீரோக்களிடம் கையெழுத்து வாங்கி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.

தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு அமலில் உள்ளது. இதனால் குறிப்பிட்டதக்க வகையில் மக்கள் தங்கள் வேளைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

ஆனால், ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அமலில் இருந்ததில் இருந்து மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட 24 மணிநேரமும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் அயராது உழைத்து வந்தனர்.

இந்த நிஜ ஹீரோக்களிடம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி கையெழுத்து வாங்கி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

unknown node
நிஜ ஹீரோக்களிடம் கையொப்பம் வாங்கி நெகிழ வைத்த சூரி.!