பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஞாயிற்று கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதில் வெற்றியாளராகரித்விகாதேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைஐஸ்வர்யாமற்றும்விஜயலெட்சுமிபெற்றனர். இந்த முடிவு மக்களின் ஓட்டுக்களால் அறிவிக்கபட்டது என பிக் பாஸ் அறிவித்தது.இதில் முதல் சீசனில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றகவிஞர் சினேகன்பிக் பாஸ் குறித்துவிமர்சனங்களைமுன்வைத்தார். அதாவது, பிக் பாஸ் முதல் சீசனில் நான் இரண்டாம் இடம் பெற்றேன் இதனை வெளியில் வந்ததும் மக்கள்நீங்கள்தான் ஜெயித்திருக்கவேண்டும்என கூறினார்கள் நான் நம்பவில்லை. ஆனால் தற்போது நடந்தஇறுதி போட்டியைபார்க்கையில் எனக்கு சந்தேகமாக உள்ளது எனவும்,மக்கள் ஓட்டு போட்டுதான் போட்டி நடக்கிறது என்றால்,சென்ட்ராயனும், யாசிகாவும்இறுதி போட்டிக்குமுன்னேறி இருப்பார்கள் என்றும்,பிக் பாஸ் டீம்யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறதோ அவர்கள் தான் ஜெயிப்பார்கள் என கூறியுள்ளார். பிக் பாஸ் போட்டியாளரே இப்படி சொல்லி இருப்பது பிக் பாஸ் பார்ப்பவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU