சென்னை :சிவாஜி நடிப்பில் 1952ம் ஆண்டு வெளியான “பராசக்தி” திரைப்படம், 72 வருடங்களை கடந்தாலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்புடன் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. ஆனால், அந்த டைட்டில் தன்னுடையது என விஜய் ஆண்டனி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவரின் படத் தலைப்பு ‘PARAASHAKTHI’ என்ற வார்த்தையில் ‘AA’இருக்கிறது. SKவின் படத் தலைப்பு ‘PARASHAKTHI’.
இதில் ஒரு ‘A’ மட்டும் இருக்கிறது. இதனால், 2 டைட்டிலும் வெவ்வேறு Spelling என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த தலைப்பு இருவருக்கும் 25வது படமாகும். இவ்வாறு, பராசக்தி’ டைட்டில் விவகாரம் சூடுபிடிக்க தொடஙகியது. இந்த நிலையில், ‘பராசக்தி’ படத் தலைப்புக்கான உரிமையை சிவகார்த்திகேயன் படத்துக்கு வழங்கியதாக ஏவிஎம் நிறுவனம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது.
unknown nodeஆனால், பெயர் உரிமம் தெலுங்கில் யாரிடம் உள்ளது என்பது கேள்வி எழுந்தது ? ஜுலை, 2024ல் படத்தலைப்பை தெலுங்கில் பதிவு செய்ததாக விஜய் ஆண்டனி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தாக தெரிகிறது.
அதாவது, சிவகார்த்திகேயனின் பராசக்தி (SK25) படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், மற்றொரு பராசக்தி (VA25) பட தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, மற்றும் அந்த படத்தின் (VA25) இயக்குநர் அருண் பிரபு சந்தித்து பேசி சுமூகமான முடிவை எடுத்து கொண்டனர்.
அதன்படி, சிவகார்த்திகேயனின் படத்திற்கு தமிழ், தெலுங்கில் ‘பராசக்தி’என்றும், விஜய் ஆண்டனியின் படத்திற்கு தமிழில் ‘சக்தி திருமகன்’, இந்தி, கன்னடம், மலையாளத்தில் ‘பராசக்தி’ என்றும் பெயரிடப்பட உள்ளதாக இரு தரப்பிலும் பேசி சமரசம் செய்துள்ளனர். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது புதிய தலைப்பு விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node