பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா! கையில் வைத்திருக்கும் முரட்டு லைன் அப்!

எஸ்.ஜே.சூர்யா : ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும்  எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு

sj surya

எஸ்.ஜே.சூர்யா :ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும்  எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார்.

அஜித்தை வைத்து வாலி படத்தினை இயக்கியதன் மூலம் அறிமுகமான இவர் குஷி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கினார். பின் படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் களமிறங்கி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துவிட்டார்.

கடைசியாக இவர் வில்லனாக நடித்த மாநாடு, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி, டான் ஆகிய படங்களில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே கூறலாம். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள பெரிய பெரிய படங்களில் இவர் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அப்படி, அவர் அடுத்ததாக எந்தெந்த படங்களில் வில்லனாக நடிக்கிறார் என்பது பற்றிய அவருடைய லைன் அப்பை பார்க்கலாம். இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து அவர் அடுத்ததாக தனுஷிற்கு வில்லனாக ராயன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜீலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் நானிக்கு வில்லனாக சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து இந்தியன் 3 படத்தில் நடித்து இருக்கிறார். அடுத்ததாக ராம்சரணுக்கு வில்லனாக கேம்சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அதைப்போல, விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள LIC படத்திலும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா  நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து விக்ரமுக்கு வில்லனாக வீர தீர சூரன் படத்திலும், கார்த்திக்கு வில்லனாக சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்திலும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா  தான் நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் வெளியான பிறகு இன்னுமே அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் குவியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா! கையில் வைத்திருக்கும் முரட்டு லைன் அப்!