வைபவ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லால்வானி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். சதீஸ் காமெடி வேடத்தில் நடித்து உள்ளார்.
unknown nodeஇப்படத்தில் வைபவ் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளர். இப்பட ப்ரோமோஷனின் கவுண்டமணி போட்டோ பயன்படுத்தப்பட்டது. மேலும், சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் கதாபாத்திரமும் பயன்படுத்தப்பட்டது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
unknown nodeஇது குறித்து கவுண்டமணியின் வக்கீல், ‘ கவுண்டமணி அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிக்ஸர் படத்தில் காட்சிகள் கவுண்டமணி பெயரை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது ஆதலால் அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். ‘ என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
unknown nodeஅடுத்தகட்ட நடவடிக்கையாக சிக்ஸர் படக்குழு என்ன செய்யப்போகிறார்கள் என பொறுத்து இருந்து பார்க்கலாம்.