நம்ம வீட்டு பிள்ளையை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம், குடும்பத்தின் கூட்டு மகத்துவம் புரிந்தது என்றும், அடுத்ததாக இவர் நடித்துள்ள ஹீரோ படம் டிசம்பரில் வெளியாகும் என்றும், அதன் பின் ரவிக்குமார் படத்தில் நடிக்கிறேன். விக்னேஷ் சிவன் மற்றும் நெல்சன் படங்களிலும் நடிக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.

நம்ம வீட்டு பிள்ளையை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!