சிறகடிக்க ஆசை சீரியல்.. க்ரிஷை முத்து மீனாவிடம் இருந்து மறைக்க ரோகினி போடும் அடுத்த திட்டம்..!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 7] எபிசோடில் க்ரிஷிக்கு வேற ஸ்கூல் மாற்ற அட்மிஷன் போடுகிறார் ரோகினி ..
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 7] எபிசோடில் க்ரிஷிக்கு வேற ஸ்கூல் மாற்ற அட்மிஷன் போடுகிறார் ரோகினி ..
மீனாவை துரத்த விஜயா போடும் திட்டம் ;
க்ரிஷ் வீட்டில் இருந்து முத்துவும் மீனாவும் வராங்க ..இப்போ அண்ணாமலை அவங்கள பாத்துட்டு ஏன் உங்க ரெண்டு பேரு முகமும் வாடி இருக்குது அப்படின்னு கேக்குறாரு .அதுக்கு மீனா அங்க க்ரிஷோட பாட்டிக்கு உடம்பு சரியில்ல மாமா பாத்துக்குறது கூட ஆள் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க அப்படின்னு அங்க நடந்ததெல்லாம் சொல்றாங்க ..முத்துவும் அவங்க பொண்ண திட்டுறாரு . இப்போ க்ரிஷ தத்தெடுக்க போற விஷயத்தையும் அவங்க பாட்டி கிட்ட கேட்டாச்சுன்னு சொல்றாரு முத்து . அவங்க பாட்டிக்கு நாங்க யோசிக்கிறதுக்கு டைம் கொடுத்துட்டு வந்திருக்கும்னு மீனா சொல்றாங்க.. இப்போ விஜயா வந்துருராங்க முத்து பேச்ச மாத்திர்றாரு.
ஆனா ரோகிணி இதெல்லாம் ஒளிஞ்சி நின்னு கேட்டுட்டு இருக்காங்க. இதை அப்படியே விஜயா கிட்ட போய் சொல்றாங்க .ஆண்ட்டி அந்த பையன இவங்க தத்தெடுக்க போறாங்களாமா.. அத பத்தி ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. விஜயாவும் விடுமா அவங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும். இத வச்சு அவங்க ரெண்டு பேரையும் இந்த வீட்டை விட்டு துரத்தலாம்னு சொல்றாங்க. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தா அப்ப மீனாவால குழந்தை பெத்துக்க முடியாது தானேன்னு எல்லாரும் பேசுவாங்க.. அந்த காரணத்தை வச்சே அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு தொரத்தலாம்னு பிளான் போட்டு வச்சுருக்காங்க . ஆனா ரோகினி நினைக்கிறாங்க இதனால நமக்கு எந்த யூஸ்ம் இல்லையே அப்படின்னு.
புது ஸ்கூலுக்கு செல்லும் க்ரிஷ் ;
இப்போ ரோகினியும் வித்யாவும் ஒரு ஸ்கூலுக்கு போறாங்க அங்கே க்ரிஷுக்கு அட்மிஷனும் போடுறாங்க. அப்போ வித்யா ரோகினிக்கு அட்வைஸ் பண்றாங்க அவங்க ரெண்டு பேரும் க்ரிஷ தத்து எடுத்தா உன் கூட தானே இருப்பான்.. உனக்கு அது நல்லது தானே அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு ரோகினி சொல்றாங்க அந்த வீட்டுக்கு வந்தா அத்தை அவன ஏதாவது சொல்லி திட்டிட்டே இருப்பாங்க அதனால அவன் கஷ்டப்படுவான் வேணாம்டி .. இப்போ மீனா டைனிங் டேபிள் உக்காந்து பூ கட்டிட்டு இருக்காங்க விஜயா வந்து எனக்கு டான்ஸ் ஸ்கூலுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துரு மதியம் அப்படின்னு சொல்றாங்க..
உடனே மீனா நான் பூக்கட்டி கொண்டு போகணும் அப்படின்னு சொல்லிடறாங்க .வேகமா முத்துவும் அப்போ எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்கன்னு கேளு மீனா அப்படின்னு சொல்றாரு.. அதுக்கு விஜயா என்னது மாமியாருக்கு சாப்பாடு கொண்டு வரதுக்கு சம்பளம் கொடுக்கணுமா அப்படின்னு கேக்குறாங்க.. இப்ப முத்து சொல்றாரு மீனா வீட்ல உள்ள வேலையெல்லாம் பாத்துட்டு பாத்தாததுக்கு அவ வேலையும் பாத்துட்டு இருக்கா. . இதுல உங்களுக்கு சாப்பாடு வேற கொண்டு வரணுமா அப்படின்னு சொல்றாங்க..