இணையத்தை கலக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.!

Simbu, who is starring in the conference film, is currently posting photos of himself in a different suit with a coat suit.

மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு தற்போது கோட் சூட்டுடன் வித்தியாசமான கெட்டப்பிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .அதன் பின்னர் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் மஃப்டி பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் சமூக ஊடகங்களில் நுழைந்த சிம்பு தனது புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது கோட் சூட்டில் நீண்ட தாடி மற்றும் முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node